1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2020 (19:41 IST)

தங்குவதற்காக கொடுத்த பள்ளியை சுத்தமாக்கிய வெளிமாநில தொழிலாளிகள்

தங்குவதற்காக கொடுத்த பள்ளியை சுத்தமாக்கிய வெளிமாநில தொழிலாளிகள்
ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் தங்குவதற்காக கொடுக்கப்பட்ட பள்ளிக்கூடத்தை புத்தம் புதிய கட்டிடமாக அந்த தொழிலாளிகள் மாற்றி உள்ள ஆச்சரியமான செய்தி தற்போது வெளிவந்துள்ளது 
 
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பல்சானா என்ற பகுதியில் தங்கியிருந்த 54 வெளிமாநில தொழிலாளர்கள் திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் செல்ல முடியாமல் பெரும் சிக்கலில் இருந்தனர். இதனை அடுத்து அவர்களுக்காக ராஜஸ்தான் அரசு ஒரு பள்ளிக்கூடத்தை ஒதுக்கி அங்கு தங்க வைத்தனர். மேலும் மூன்று வேளை உணவு, மற்றும் மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ராஜஸ்தான் அரசு தங்களுக்காக இவ்வளவு செய்யும்போது தாங்களும் ஏதாவது திருப்பி செய்ய வேண்டும் என அந்த தொழிலாளிகள் யோசித்தனர். உடனடியாக பாழடைந்து கிடந்த அந்த பள்ளியை சுத்தம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக பள்ளி நிர்வாகிகளை அழைத்துப் பேசிய தொழிலாளர்கள், பெயிண்ட் உட்பட ஒரு சில பொருள்களை வாங்கி தந்தால் இந்த பள்ளியை புத்தம்புது பள்ளியாக மாற்றி தருகிறோம் என்று கூறினர் 
 
இதனையடுத்து அந்த பள்ளியின் நிர்வாகிகள் பழைய மாணவர்களை தொடர்புகொண்டு நிதி உதவி பெற்று தொழிலாளர்கள் கேட்ட பெயிண்ட் உள்பட ஒருசில பொருட்களை வாங்கிக் கொடுத்தார்கள். தற்போது அதில் தங்கியிருந்த தொழிலாளர்கள் அந்த பள்ளியை மராமத்து செய்து பெயின்ட் அடித்து புத்தம்புது பள்ளியாக மாற்றிவிட்டனர் 
 
தற்போது இந்த பள்ளியை பார்க்கும் அனைவரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது தங்களுக்கு தங்குவதற்காக இடம் கொடுத்த பள்ளியை சுத்தம் செய்து புத்தம்புது கட்டிடமாக மாற்றிய வெளிமாநில தொழிலாளிகளுக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்