செவ்வாய், 11 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2016 (17:03 IST)

ஒரே இரவில் 14 பேர்: மெக்டொனால்டு ஊழியர் மூலம் வந்த பாலியல் தொல்லை

இணைய தளம் மூலமாக வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் உணவுகளை அவர்கள் வீட்டுக்கே சென்று கொடுக்கும் சேவையை பிரபல உணவு விடுதியான மெக்டொனால்டு வழங்கி வருகிறது.


 
 
பெங்களூரில் ஜே.பி.நகரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மெக்டொனால்டு நிறுவன ஊழியர் ஒருவர் மூலம் பாலியல் தொந்தரவு வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் அந்த பெண் உணவு ஆர்டர் செய்துள்ளார்.
 
அதை வீட்டில் வந்து டெலிவரி செய்ய சிரியேஸ் என்ற பையன் வந்துள்ளார். ஆப்போது அந்த பெண் உணவு தான் விரும்பியது போல் இல்லை என கூறி அதை வாங்க மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 
உனக்கு நான் பாடம் புகட்டுவேன் என கூறிவிட்டு சென்றுள்ளார் மெக்டொனால்டு ஊழியர். பின்னர் அந்த பெண்ணின் போன் நம்பரை வாட்ஸ்ஆப் குரூப்பில் இது ஒரு விபச்சாரியின் நம்பர் என பகிர்ந்துள்ளார்.
 
இதனையடுத்து அந்த பெண்ணை இரவு முழுவதும் தொடர்பு கொண்ட சுமார் 14 பேர் உனக்கு எவ்வளவு ரேட் என கேட்டு பாலியல் தொந்தரவில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்த பெண் காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில் காவலர்கள் சிரியேஸை கைது செய்தனர். காவல்துறையின் விசாரணையில் அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.