1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 31 அக்டோபர் 2024 (07:22 IST)

மையோனஸ் உணவுப்பொருளுக்கு மாநிலம் முழுவதும் தடை! - உணவு பிரியர்கள் அதிர்ச்சி!

Mayonnaise

கடந்த சில காலமாக மையோனஸ் உணவுப் பொருட்களால் உடல்நல பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டதால், மயோனஸ் உணவுப்பொருளுக்கு தடை விதித்து தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 

தற்போதைய ஃபாஸ்ட் புட் காலத்தில் இளைஞர்கள் பல்வேறு துரித கதி உணவுகளை விரும்பி சாப்பிட்டு வரும் நிலையில் பல உணவுகள் உடலுக்கு அபாயத்தை விளைவிப்பவையாக மாறி வருகின்றன. சமீபத்தில் கேரள, தமிழக பகுதிகளில் சவர்மா உணவால் பலருக்கு உடல்நல பிரச்சினைகள், உயிரிழப்புகள் ஏற்பட்டன.

 

இந்த சர்ச்சைக்குரிய உணவு வகைகளில் தற்போது மயோனஸும் இணைந்துள்ளது. முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனஸ் பொருளானது பர்கர், பீட்சா, சிக்கன் உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. சமீபமாக தெலுங்கானாவில் உணவு பொருட்களால் ஏற்பட்ட உடல்நல பாதிப்பு குறித்த சோதனையில் பெரும்பாலும் மயோனஸால் அதிக உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
 

 

இதனால் முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதித்து தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் முட்டை பயன்படுத்தாமல் தயாரிக்கப்படும் சைவ மயோனஸ்க்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. மயோனஸ்க்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை உணவு பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K