வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 10 மார்ச் 2016 (13:37 IST)

மராட்டியர் அல்லாதவர்களின் ஆட்டோக்களை எரித்து விடுங்கள்: ராஜ் தாக்கரேவின் சர்ச்சைக்குரிய பேச்சு

மராட்டியர்கள் அல்லாதவர்கள் புதிதாக வாங்கும் ஆட்டோக்களை எரித்து விடுங்கள் என்று மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா உறுப்பினர்களிடம் அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே சர்ச்கைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.


 

 
மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா கட்சி கட்சியின் 10 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கலந்து கொண்டு பேசினார்.
 
அந்த கூட்டத்தில் ராஜ் தாக்கரே கூறுகையில், "மாநிலத்தில் புதிதாக வழங்கப்படும் ஆட்டோ உரிமத்தில் 70 சதவீதம் மராட்டியர் அல்லாதவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
 
மண்ணின் மைந்தர்களுக்கே ஆட்டோ உரிமங்கள் வழங்கப்பட வேண்டும். அரசு உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் கேட்பவர்களுக்கு எல்லாம் உரிமம் வழங்குகிறது.
 
எனவே, மராட்டியர்கள் அல்லாதவர்கள் புதிதாக வாங்கும் ஆட்டோக்களை எரிக்குமாறு கட்சியினரை கேட்டுக் கொள்கிறேன்.
 
அவ்வாறு எரிக்கும் போது, ஆட்டோவில் உள்ளவர்களை கீழே இறக்கிவிட்டு விட்டு வாகனத்தை எரித்துவிடுங்கள்.
 
முன்னர் இருந்த மாநில அரசுக்கும், தற்போதுள்ள பட்னாவிஸ் அரசுக்கும் எந்த வித வேறுபாடும் இல்லை.
 
முகங்கள் மட்டுமே மாறியுள்ளன. ஊழல், வேலை செய்யும் விதம் ஆகியவை அனைத்தும் ஒரே விதமானத்தான் உள்ளது" என்று கூறினார்.