வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2017 (15:22 IST)

மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த கணவன்!

மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த கணவன்!

உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் திருமணமான ஒருவர் தனது மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி சென்று பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.


 
 
உத்தரபிரதேசத்தில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் ஒரு நபருடன் திருமணமானது. திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். அந்த பெண் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
 
இதனையடுத்து பிரிந்து சென்ற மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தால் கணவன் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சென்று அவரை கடத்தியுள்ளார். இதனையடுத்து அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளனர்.
 
பலாத்காரம் செய்த பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணை சாலையோரத்தில் வீசி விட்டு தப்பித்து விட்டனர் மூவரும். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் தலைமறைவாக உள்ள மூவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.