1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2016 (18:13 IST)

சிறுமியை திருமணம் செய்து ரூ:50 ஆயிரத்துக்கு விற்ற கணவன்

உத்தர பிரதேச மாநிலத்தில் 14 வயது சிறுமியை திருமணம் செய்து,  கணவன் ரூ:50 ஆயிரத்துக்கு வீட்டு வேலை பணியாளராக பெண் ஒருவரிடம் விற்றுள்ளார்.


 

 
உத்தர பிரதேச மாநிலத்தின் பனாரஸ் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி டெல்லியில் உள்ள அனாதை இல்லத்தில் வசித்து வந்தார். இந்த சிறுமியை ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து அழைத்து வந்த உறவினர் ஒருவர் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
 
அந்த சிறுமியின் கணவன் வேலை வாங்கி தருவதாக கூறி சிறுமியை டெல்லியிலிருந்து மும்பைக்கு அழைந்து சென்று ரூ.50 ஆயிரத்துக்கு வீட்டு வேலை செய்யும் பணியாளராக பெண் ஒருவரிடம் விற்றுவிட்டார்.
 
இதுதொடர்பாக அந்த சிறுமி மும்பை காவல் துறையினரிடம் புகார் செய்து, காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த நபரை தேடி வருகின்றனர்.