செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2025 (14:22 IST)

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!
புதிய சிம் கார்டு வாங்கிய ஒருவர், கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் பழைய சிம் எண் தனக்கு ஒதுக்கப்பட்டதால் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார்.
 
மனிஷ் என்ற அந்த நபர் புதிய சிம் கார்டு வாங்கியுள்ளார். அந்த எண்ணுக்கு ஒருநாள் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசியவர், "நான் ரஜத் படிதார் பேசுகிறேன்... அந்த எண்ணை திருப்பி கொடுத்துவிடுங்கள்" என்று கூறியுள்ளார். அதற்கு மனிஷ், "அப்படியானால் நான் தோனி பேசுகிறேன்" என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.
 
சில நிமிடங்களில் மனிஷின் வீட்டுக்கு போலீசார் வந்து விசாரித்தபோதுதான், அந்த எண் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண் என்பதும், அவர் அந்த எண்ணை பயன்படுத்த விரும்பியதால், இழந்த எண்ணை மீட்க முயற்சித்ததும் தெரியவந்துள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த மனிஷ், அந்த சிம்மை ரஜத் படிதாருக்கு கொடுக்க ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
 
இந்த சம்பவம் சத்தீஸ்கரில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
 
Edited by Siva