செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2016 (16:24 IST)

அக்காவுடன் நிச்சயதார்த்தம்; தங்கையுடன் திருமணம்!

அக்காவுடன் நிச்சயதார்த்தம்; தங்கையுடன் திருமணம்!

கர்நாடக மாநிலத்தில் ஒரு இளைஞர் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணின் தங்கையை திருமணம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


 
 
ரெனிபுனூரை சேர்ந்த அந்த இளைஞருக்கு கடந்த ஆண்டு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பெங்களூரில் உள்ள ஒரு ஷோரூமில் வேலைபார்த்து வந்த அவர், தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
 
இந்நிலையில் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணின் தங்கை மீது இவருக்கு காதல் வந்துள்ளது. இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தனர். பின்னர் அக்காவுடன் நிச்சயமான பின்னரும் அந்த நபர் தங்கையை திருமணம் செய்துள்ளார்.
 
இந்த விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வர அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பெண் வீட்டார் இந்த விவகாரத்தை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இருவரும் சட்டப்படி திருமணம் செய்துள்ளதால் ஒன்றும் செய்ய முடியாது என போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.