திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2017 (20:07 IST)

பாகுபலியால் பலியான தொழிலதிபர்; மும்பையில் அதிர்ச்சி!!

பாகுபலி படத்தில் பிரபாஸ் நிறைய ஸ்டண்ட் காட்சிகளை செய்திருப்பார். அந்த ஸ்டண்ட் காட்சிகள் பெரும்பாலும் கிராபிக்ஸால் உருவாக்கபட்டவை.


 
 
இது போன்ற காட்சிகளை யாரும் முயற்சிக்க வேண்டாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மும்பை சேர்ந்த ஒருவர் பாகுபலி படத்தின் ஸ்டண்ட் காட்சி ஒன்றை முயற்சித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
 
பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் பிரபாஸ் மிக உயரமான நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து சாகசம் செய்வார். இந்திராபால் படில் என்ற தொழிலதிபர் ஒருவர் ஷாஹாபூரில் உள்ள மஹூலி கோட்டைக்கு சென்று அங்குள்ள நீர்வீழ்ச்சியின் மீது ஏறி, குதித்துள்ளார். 
 
அப்போது அவர் எதிர்பார விதமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அந்த நீர்வீழ்ச்சியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.