ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (19:29 IST)

உபியில் அகிலேஷ் தோற்கவில்லை, ஏமாற்றப்பட்டார்; மம்தா பானர்ஜி

உத்தரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தோற்கவில்லை என்றும் அவர் ஏமாற்றப்பட்டார்  என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த கட்சியை 111 தொகுதிகளில் மட்டுமே பிடித்துள்ளது 
 
இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து மம்தா பானர்ஜி கூறியபோது உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம், மத்திய படைகளையும் வைத்துக்கொண்டு இந்த  வெற்றியை அவர்கள் பெற்று உள்ளார்கள் என்றும் இந்த தேர்தலில் அகிலேஷ் யாதவ் தோற்கவில்லை என்றும் ஏமாற்றப்பட்டார்   என்றும் ஆனாலும் அவர் கவலைப்பட தேவை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்