1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 25 மே 2021 (18:44 IST)

இன்று இரவு முழுவதும் கட்டுப்பாட்டு அறையில் இருக்க மம்தா முடிவு!

வங்க கடலில் உருவான யாஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இன்று இரவு முழுவதும் கட்டுப்பாட்டு அறையில் இருக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
 
வங்க கடலில் உருவான யாஸ் புயல் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று கரையை கடக்க இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது சுமார் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் பலத்த சேதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதால், உடனடியாக மீட்புப் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று இரவு முழுவதும் கொல்கத்தாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருக்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளதாகவும் உடனுக்குடன் யாஸ் புயலால் சேதமான இடங்களை கண்டறிந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன