1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பட்ஜெட்- 2022-23
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (12:42 IST)

பட்ஜெட் 2022 - இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான அறிவிப்பு என்ன?

நாடாளுமன்றத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் தற்போது தொடங்கியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். 

 
இளைஞர்கள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான முக்கிய அறிவிப்புகள்:
அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் 
 
ஆத்மநிர்பார் தன்னிறைவு இந்தியாவை அடைவதற்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 
 
30 லட்சம் கோடி கூடுதல் உற்பத்தியை உருவாக்கும் சாத்தியம் உள்ளது. 
 
திறன் மேம்பாட்டுத் திட்டம் புதுப்பிக்கப்படும்.
 
இளைஞர்களின் திறன், மேம்பாடு மற்றும் மறுதிறன் ஆகியவற்றுக்காக, டிஜிட்டல் தேஷ் இ-போர்ட்டல் தொடங்கப்படும்.
 
தன்னம்பிக்கை இந்தியா திட்டத்தின் கீழ் 16 லட்சம் வேலைகள் வழங்கப்படும்.
 
பெண்களுக்கான அறிவிப்புகள்:
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மிஷன் சக்தி, மிஷன் வாத்சல்யா, சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 போன்ற திட்டங்களை மோதி அரசாங்கம் விரிவாகச் சீரமைத்துள்ளது.