1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 24 மே 2022 (17:53 IST)

14 ரூபாய் விலை குறைவு: பெட்ரோல் வாங்க அண்டை மாநிலம் செல்லும் பொதுமக்கள்!

petrol
மகாராஷ்டிர மாநிலத்தை விட அண்டை மாநிலமான குஜராத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைவாக விற்கப்படுவதாக மகாராஷ்டிரா மாநில எல்லையில் உள்ள பொதுமக்கள் குஜராத் சென்று பெட்ரோல் வாங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
அதேபோல் மகாராஷ்டிர மாநிலத்தை விட குஜராத் மாநிலத்தில் டீசல் விலை 3 ரூபாய் 50 காசுகள் குறைவாக விற்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
 
சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்த நிலையில் தமிழகம் உள்பட ஒரு சில மாநில அரசுகள் மற்றும் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது