பட்நாவிஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு..

Arun Prasath| Last Modified சனி, 9 நவம்பர் 2019 (20:18 IST)
மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேவேந்திர ஃபட்நாவிஸை ஆளுநர் அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற மஹாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் மொத்தமுள்ள 288 இடங்களில் 105 இடங்களை பாஜகவும், 56 இடங்களை சிவ சேனாவும் கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இழுபறி நடந்து வருகிறது. இந்நிலையில் மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக முதல்வர் வேட்பாளர் தேவேந்திர பட்நாவிஸ்க்கு அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சட்ட பேரவை தேர்தலில் அதிக இடங்களை வென்ற கட்சி பாஜக என்பதால் ஃபட்நாவிஸை ஆளுநர் அழைத்துள்ளார் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :