வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bala
Last Modified: செவ்வாய், 3 நவம்பர் 2015 (11:25 IST)

உதவி கேட்ட வாலிபரை காலால் உதைத்தேனா? -குசும் மெதெலே விளக்கம்

மத்தியபிரதேசத்தில் கால்நடை வளர்ப்பு துறை அமைச்சராக பதவி வகிப்பவர் குசும் மெதெலே. ஒரு அரசு விழாவிற்காக பண்ணா மாவட்டத்திற்கு சென்று விட்டு அவர் தன் காரில் ஏறி கிளம்பும் போது, அவர் முன் ஒரு சிறுவன் மண்டியிட்டு உதவி கேட்கிறான்.

அவன் ஒரு ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. அதனால் கோபமடைந்த அந்த பெண் அமைச்சர் அந்த சிறுவனின் தலையை காலால் உதைத்து விட்டு அங்கிருந்து தன் காருக்கு போகிறார். அவரின் பாதுகாவலர்கள் அந்த சிறுவனை அங்கிருந்து அப்புறப்படுத்துகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த வீடியோ முற்றிலும் பொய்யானது என அமைச்சர் குசும் மெதெலே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூறியபடி நான் சாலையில் சென்று கொண்டிருந்த போது குடிபோதையில் வாலிபர் ஒருவர் என் காலடியில் வந்து விழுந்தார். அந்த வாலிபரின் முகத்தை கூட நான் பார்க்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ முற்றிலும் பொய்யானது.