புத்தாண்டில் ஒரு மகிழ்ச்சியான செய்தி: சிலிண்டர் விலை குறைப்பு!
ஒவ்வொரு மாதம் முதல் தேதி சிலிண்டர் விலை மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இன்று ஜனவரி 1ஆம் தேதி சிலிண்டர் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பில், வணிக பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர் விலை குறைந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ₹14.50 குறைந்து ₹1966 விற்பனை ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதி, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ₹16 உயர்ந்த நிலையில், தற்போது ₹14.50 குறைந்துள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று முதல் குறைக்கப்பட்டு இருந்தாலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறையவில்லை என்ற அறிவிப்பு இல்லத்தரசிகளுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.
Edited by Siva