1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 மார்ச் 2017 (11:01 IST)

மெக்டொனால்டு கடையின் வாடிக்கையாளரா நீங்கள்; அப்போ கட்டாயம் படிங்க!!

கொல்கத்தாவில் உள்ள மெக்டொனால்டு கடையில் காலை உணவு சாப்பிடச் சென்ற பெண்ணுக்கு, கடை ஊழியர் வறுத்த பல்லியை பரிமாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பிரியங்கா மித்ரா என்ற பெண், தனது மகளுடன் காலை உணவு சாப்பிட மெக்டொனால்டு சென்றுள்ளார். வழக்கம்போல, காலை உணவுடன் ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் ஆர்டர் செய்துள்ளார். 
 
சிறிது நேரத்திற்கு பின்பு ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் பரிமாறப்பட்டது. அதனை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது தனது தட்டில் கருப்பாக எதோ கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது பல்லி ஒன்று நன்கு வறுத்து, உணவுடன் பரிமாறியுள்ளதாக தெரியவந்தது.
 
இது குறித்து கடை உழியர்களிடம் கூச்சலிட்டுள்ளார். எனினும், யாரும் இதை கண்டுகொள்ளவில்லை. எனவே அந்த உணவை  போட்டோ எடுத்துக் கொண்ட பிரியங்கா அங்கிருந்து வெளியேறினார்.
 
இதன்பின்னர் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும், ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றையும் வெளியிட்டார். 
 
அதன் பின்னர் மெக்டொனால்டு நிர்வாகத்தினர் தொடர்பு கொண்டு மன்னிப்பு கோரியுள்ளனர். இந்நிலையில் பிரியங்கா தற்போது 4 மாதம் கர்ப்பிணியாக உள்ளார் என்ப்து குறிப்பிடத்தக்கது.