வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 23 ஜூலை 2015 (13:50 IST)

போன் செய்தாலே வீடு தேடி வரும் மது பாட்டில்கள்; ஆந்திரா அரசு திட்டம்

ஆந்திரா மாநிலத்தில் போன் செய்தால் வீடுகளுக்கு தேடி வந்து கொடுக்கும் திட்டத்தை அம்மாநில அரசு செயல்படுத்த உள்ளது.
 

 
ஆந்திரா மாநிலத்தில் மது விற்பனையை அதிகரிக்கும் வகையில், சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் மது பாட்டில்கள் வீடு தேடி வந்து கொடுக்கும் முறையை அரசு அமல்படுத்த உள்ளது. இதன்படி, போனில் குறுந்தகவல் அனுப்பினாலும் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்கும் திட்டம் செயல்படவுள்ளது.
 
மேலும் ஆந்திராவில் உள்ள ஷாப்பிங் மால்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. இதுதவிர, வைஷாக், விஜயவாடா, ராஜமுந்திரி, காக்கி நாடா மற்றும் குண்டூர் பகுதியில் உள்ள 5 மால்களில் மதுக்கடை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
அரசு மதுக்கடைகளில் மது பாட்டில்களில் அச்சிடப்பட்ட விலைக்கே மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் என்றும், சில தனியார் மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதால், அச்சிடப்பட்டுள்ள விலைக்கே அரசு மதுக்கடைகளில் மது விற்பனை செய்யப்படுகிறது என்று பிரசாரமும் செய்ய உள்ளதாகவும் ஆந்திர மாநில மதுவரி துறை ஆணையர் ஸ்ரீநிவாஸ் ஸ்ரீநரேஷ் கூறியுள்ளார்.