திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 6 மார்ச் 2017 (14:51 IST)

பெண் சிங்கம் வன அதிகாரிகள் மூலம் வறண்ட கிணற்றில் இருந்து மீட்பு - வீடியோ!

ஒரு பெண்சிங்கம் குஜராத் அம்ரேலி வனப்பகுதியில், வனத்துறை அதிகாரிகள் மூலம் வறண்ட கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் தண்ணீர் தேடி வந்து வறண்ட கிணற்றில் விழுந்த பெண் சிங்கத்தை வனத்துறையினர்  போராடி மீட்டனர்.

 
குஜராத் மாநிலம் அம்ரேலியில் வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் இருந்த வறண்ட கிணற்றில் பெண் சிங்கம் ஒன்று விழுந்து  தவித்து வந்தது. 
 
இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் பெண் சிங்கம்யை கிணற்றிலிருந்து  மீட்கும் பணியைத் தொடங்கினர்.