2.5 அடி உயர மனிதருக்கு சமூக வலைத்தளத்தின் உதவியால் கிடைத்த மணப்பெண்!

2.5 அடி உயர மனிதருக்கு சமூக வலைத்தளத்தின் உதவியால் கிடைத்த மணப்பெண்!
siva| Last Updated: வியாழன், 8 ஏப்ரல் 2021 (21:25 IST)
2.5 அடி உயர மனிதருக்கு சமூக வலைத்தளத்தின் உதவியால் கிடைத்த மணப்பெண்!
2.5 அடி உயர மனிதருக்கு கடந்த சில ஆண்டுகளாக மணப்பெண் கிடைக்காத நிலையில் சமூக வலைதளங்களில் உதவியால் தற்போது மணப்பெண் கிடைத்துள்ளதை எடுத்து அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இரண்டரை அடி உயரமுள்ள மனிதர் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக அவரது பெற்றோர் மணப்பெண் தேடினர். ஆனால் அவரது உயரத்திற்கு ஏற்ற மணமகள் கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் குடும்பத்தினர் பெரும் கவலை அடைந்தனர்

5 ஆண்டுகள் தேடியும் மணப்பெண் கிடைக்காததால் ஒரு கட்டத்தில் தனக்கு தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி உத்தரப்பிரதேச மாநிலத்தின் மகளிர் காவலர்களை அவர் அணுகினார். இதனை அடுத்து மகளிர் காவலர்களின் யோசனைப்படி சமூகவலைதளத்தில் விளம்பரம் செய்யப்பட்டது
இந்த நிலையில் தற்போது இரண்டரை அடி உயர மனிதனுக்கு ஏற்ற மணமகள் சமூக வலைதளத்தின் உதவியால் கிடைத்துள்ளதாகவும், இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த இரண்டரை அடி மனிதர் சமூக வாழ்நிலை பயனாளிகளுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்


இதில் மேலும் படிக்கவும் :