வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 28 ஜனவரி 2023 (12:01 IST)

அதானி குழுமம் பங்குகள் சரிவு... எல்.ஐ.சி நிறுவனத்திற்கு ரூ.18000 கோடி நஷ்டம்!

lic
அதானி குழுமம் பங்குகள் சரிவு... எல்.ஐ.சி நிறுவனத்திற்கு ரூ.18000 கோடி நஷ்டம்!
கடந்த இரண்டு நாட்களாக அதானி நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்ததை அடுத்து அதானி நிறுவனங்களில் முதலீடு செய்த எல்ஐசி நிறுவனத்திற்கு ரூ.18000 கோடி நஷ்டம் என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் இந்திய பங்குச் சந்தை மிக மோசமாக சரிந்தது என்பது தெரிந்தது. இந்த நிலையில் அதானி நிறுவனங்களின் பங்குகளில் எல்ஐசியின் மிகப்பெரிய முதலீடு இருந்த நிலையில் இரண்டே நாள்களில் நிறுவனத்திற்கு 18,647 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட நிறுவனங்களில் எல்ஐசி மிகப்பெரிய அளவில் முதலீடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran