வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 6 மார்ச் 2018 (09:00 IST)

திரிபுராவில் லெனின் சிலை அகற்றம்: பதவியேற்கும் முன்பே பழிவாங்கலா?

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மூன்று மாநில தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று மூன்று மாநிலங்களிலும் தனியாகவும், கூட்டணி கட்சியின் ஆதரவாலும் ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்த நிலையில் திரிபுரா மாநிலத்தில் 25ஆண்டு கால மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்திய பாஜக வரும் 8ஆம் தேதி பதவியேற்கவுள்ளது.

இந்த நிலையில் நேற்று திரிபுராவில் உள்ள பொலெனியா கல்லூரி சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்த லெனின் முழு உருவச் சிலையை பாஜகவினர் அகற்றியுள்ளனர். இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் அராஜகமாக சிலை அகற்றப்பட்டது.

மேலும் பிஷால்கார்க், கோவாய், மோகான்பூர், சாப்ரூம், கோம்லாங், மெலார்க், ஜிரானியா, பெலோனியா, ராம்நகர் மற்றும் அகர்தலாவில் தெற்கு ராம்நகர் ஆகிய பகுதிகளில் இருகட்சி தொண்டர்களிடையே மோதல் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

பதவியேற்கும் முன்பே பழிவாங்கும் நடவடிக்கையை பாஜக தொடங்கிவிட்டதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். பாஜகவினர்களின் இந்த போக்கை அம்மாநில மக்களும் ரசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.