1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2016 (17:57 IST)

கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட் வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடி

கடைசி நேரத்தில் ரயில் பயணச்சீட்டு பெற்றால் பத்து சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.  


 

 
கடைசி நேரத்தில் ரயில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ரயில்வே ஒர் அறிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி ரிசர்வேஷன் அட்டவணை தயாரான பின்பு, டிக்கெட் பெற்று  பயணித்தால் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
 
ரயில் புறப்படுவதற்கு இரண்டரை மணி நேரத்துக்கு முன் அட்டவணை தயார் செய்யப்படும். அட்டவணை தயார் செய்யப்பட்ட பின் ரிசர்வேஷன் பெட்டியில் காலி இடம் இருந்தால், அதற்கான டிக்கெட் பெறும்போது அதில் பத்து சதவீதம் தள்ளுபடி வழக்கப்படும். ஏற்கனவே டிஜிட்டல் முறையில் முன்பதிவு செய்பவர்களுக்கு சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
இதனை அடுத்த ஆறு மாதத்துக்குப் பரிசோதனை முறையில் வைத்திருப்பார்கள். அதிகளவில் வரவேற்பு இருக்கும் பட்சத்தில் இதனைத் தொடர்ந்து கடைப்பிடிப்பார்கள்.