வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 அக்டோபர் 2022 (12:18 IST)

ரூபாய் நோட்டில் லட்சுமி-விநாயகர்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

rupee note
ரூபாய் நோட்டில் லட்சுமி-விநாயகர்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
ரூபாய் நோட்டில் லட்சுமி மற்றும் விநாயகர் புகைப்படத்தை அச்சிட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
ரூபாய் நோட்டில் தற்போது மகாத்மா காந்தியடிகளின் போட்டோ இருக்கும் நிலையில் இந்த புகைபடத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றன.
 
சர்தார் வல்லபாய் படேல், சத்திரபதி சிவாஜி, அம்பேத்கார், மோடி, லட்சுமி, விநாயகர் உள்ளிட்டவர்களின் புகைப்படத்தை பதிவு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர் .
 
இந்த நிலையில் டெல்லி பிரதமர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு செல்வதால் ரூபாய் நோட்டில் விநாயகர் மற்றும் லட்சுமி புகைப்படத்தை உடனடியாக அச்சிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 130 கோடி இந்தியர்களும் இதை விரும்புகின்றனர் என்றும் இறைவன் ஆசி கிடைத்தால் நாடு முன்னேறும் என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran