ஒரு வருஷம் கழிச்சு முதல் தடவையா பாதிப்பு! – லட்சத்தீவில் கொரோனா!

Lakshadweep
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 19 ஜனவரி 2021 (11:53 IST)
கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி ஒரு ஆண்டுகாலம் ஆகிவிட்ட சூழலில் தற்போது முதன்முறையாக லட்சத்தீவில் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டின் இறுதி வாக்கில் சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில் தற்போது உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் பரவிவிட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா 2.0 கண்டறியப்பட்டுள்ளதால் கடும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்து வந்தாலும் லட்ச தீவில் இதுவரை ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி கோவாவிலிருந்து லட்சத்தீவு பயணித்த ஒருவருக்கு முதன்முறையாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவரை தனிமைப்படுத்தியுள்ள லட்சத்தீவு அரசு, கோவாவிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :