1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (18:05 IST)

தி காஷ்மீர் ஃபைல்ஸ் போல 'லக்கிம்பூர் ஃபைல்ஸ்' - அகிலேஷ் யாதவ்!

தி காஷ்மீர் ஃபைல்ஸ் போல லக்கிம்பூர் சம்பவத்தை வைத்து ஏன் "லக்கீம்பூர் ஃபைல்ஸ்" திரைப்படம் எடுக்கக் கூடாது என அகிலேஷ் யாதவ் கேள்வி. 
 
பாலிவுட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தை பார்ப்பதற்கு காவல்துறையினருக்கு ஒரு நாள் விடுமுறை என மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து இந்த திரைப்படத்தை பார்க்க அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை என அசாம் மாநில முதல்வர் அறிவித்தார். 
 
இந்நிலையில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இந்த திரைப்படம் தொடர்பாக பேடியுள்ளார். அவர் கூறியதாவது, காஷ்மீர் சம்பவம் தொடர்பாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் எனும் திரைப்படம் எடுக்க முடியுமென்றால் லக்கிம்பூர் சம்பவத்தை வைத்து ஏன் "லக்கீம்பூர் ஃபைல்ஸ்" திரைப்படம் எடுக்கக் கூடாது?
 
லக்கிம்பூர் கேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவசாயிகள் மீது பாஜக அமைச்சரின் மகன் கார் ஏற்றிக் கொலை செய்ததையும் திரைப்படமாக எடுக்கலாம் என்று கூறியுள்ளார்.