திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

26 மாதங்களுக்கு பின் வங்கதேசத்திற்கு ரயில்: இன்று முதல் தொடக்கம்

bangladesh train
26 மாதங்களுக்கு பின் வங்கதேசத்திற்கு ரயில்: இன்று முதல் தொடக்கம்
26  மாதங்களுக்கு பின்னர் இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்கு இன்று முதல் ரயில் சேவை போக்குவரத்து தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்தியா-வங்கதேசம் இடையே ரயில் சேவை ஏற்கனவே நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது
 
இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்தியா வங்கதேசம் இடையிலான ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்த ரயில் சேவை தொடங்க ஆலோசனை செய்யப்பட்டது 
 
இதனை அடுத்து மே 29-ஆம் தேதி முதல் மீண்டும் இந்தியா வங்கதேசம் இடையே ரயில் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டது 
 
இதனை அடுத்து இன்று முதல் இந்த ரயில் சேவையை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கொல்கத்தாவில் இருந்து வங்கதேசத்துக்கு செல்ல இருக்கும் இந்த ரயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்ய உள்ளனர்