வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2016 (16:40 IST)

வாடகை காரில் ஏறியதால் பெண்ணை மிரட்டிய ஆட்டோ ஒட்டுனர்கள் - அதிர்ச்சி வீடியோ

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தெற்கு ரயில் நிலையத்தில், வித்யா கோபாலகிருஷ்ணன் என்ற பெண் ஆட்டோ ஓட்டுனரால் மிரட்டப்பட்ட விவகாரம் வீடியோவாக வெளிவந்துள்ளது.


 

 
வித்யாவை தங்கள் ஆட்டோவில் ஏறும்படி அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அவர் அங்கிருந்த உபேர் வாடகை காரில் ஏறியுள்ளார்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த ஆட்டோ ஒட்டுனர்கள், ஒன்றரை மணி நேரம், காரை நகர விடாமல், அவரிடம் வாக்குவாதம் செய்து மிரட்டியுள்ளனர். 
 
இதை அவர் வீடியோவாக எடுத்து, அனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அங்கிருந்த போலீஸ் காரர்கள் கூட தனக்கு உதவ முன்வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஆட்டோ ஒட்டுனர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.