வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 26 அக்டோபர் 2016 (15:59 IST)

லஞ்சம் கொடு அல்லது உன்னை கொடு: பெண்ணிடம் கிராம நிர்வாக அதிகாரிகள் அட்டூழியம்

கேரள மாநிலத்தில் கிருஷ்ணவேணி(34) என்பவர் தன்னிடம், கிராம நிர்வாக அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாகவும், அதைக் கொடுக்க முடியாததால் அவரை அழைத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.


 

 
இதனால் கேரள தலைமைச் செயலகப் பகுதியில், கிருஷ்ணவேணி எனக்கு நீதி வேண்டும் என்ற பேனருடம், ஒரு உண்டியலை வைத்துக்கொண்டு போராட்டம் செய்து வருகிறார்.
 
கேரள அரசு ஊழியர்கள் மத்தியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணவேணி இதுகுறித்து கூறியதாவது:-
 
எனது நிலம் தொடர்பான ஆவணங்களை அங்குள்ள அதிகாரிகள் மாற்றி, வேறொருவரின் நிலத்தை நான் ஆக்கிரமித்துள்ளது போல் மாற்றியுள்ளனர். இது தொடர்பான பிரச்சனையை தீர்க்க என்னிடம் பணம் கேட்டனர்.
 
நான் தர முடியாது என்று கூறியதால், உன் கற்பை கொடு என்று மிரட்டினர். அங்குள்ள இரண்டு அதிகாரிகள் என்னிடம் இப்படி நடந்து கொண்டனர். ஒருவர் என்னிடம் முத்தம் கேட்டார். மற்றொருவர் என்னுடன் வந்து உல்லாசமாக இரு என்றார்.
 
மேலும் இதுகுறித்து டிஎஸ்பி அஜி என்பவர் மீதும் கிருஷ்ணவேணி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் டிஎஸ்பி அஜி மறுத்துள்ளார்.