ரம்பூட்டான் பழத்திலிருந்து பரவியதா நிபா? – சாப்பிட வேண்டாமென எச்சரிக்கை!
கேரளாவில் நிபா வைரஸால் இறந்த சிறுவனுக்கு ரம்பூட்டான் பழத்தால் நிபா பரவியிருக்கலாம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் 12 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிறுவனின் பெற்றோர் உட்பட 8 பேருக்கு ஆய்வு செய்ததில் அவர்களுக்கு நிபா இல்லை என தெரியவந்துள்ளது.
சிறுவன் இறப்பு குறித்த விசாரணையில் வௌவால் கடித்த ரம்பூட்டான் பழத்தை சிறுவன் சாப்பிட்டதால் நிபா பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் கேரள அரசு அறிவிக்கும் வரை ரம்பூட்டான் பழங்களை சாப்பிட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.