செவ்வாய், 1 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2024 (13:36 IST)

ஓட்டுனர் உரிமை அட்டை வழங்கும் பணி நிறுத்தப்படும்: மோட்டார் வாகனத்துறை அறிவிப்பு..!

ஓட்டுநர் உரிமை அட்டை வழங்கும் பணி நிறுத்தப்படும் என்றும் இனி ஓட்டுநர் உரிமை டிஜிட்டலில் மட்டுமே வழங்கப்படும் என்றும் கேரள மாநில மோட்டார் வாகனத் துறை அறிவித்துள்ளது. 
 
ஓட்டுநர் அட்டை தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வரும் நிலையில், கேரள மாநில மோட்டார் வாகனத்துறை இனிமேல் டிஜிட்டலில் மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த நடைமுறை அமலுக்கு கொண்டு வர இருப்பதாகவும், வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்துமே இனி அச்சிடுவதற்கு நிறுத்தப்பட்டு, அனைத்தும் டிஜிட்டலில் வழங்கப்படும் என்றும் மோட்டார் வாகனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
வாகன துறையை நவீனமாக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருவதாகவும், வாகன ஓட்டிகள் மற்றும் அதிகாரிகளின் வசதியை கருத்தில் கொண்டு முழுக்க முழுக்க டிஜிட்டல் ஆகும் வகையிலும், இதுமட்டுமின்றி ஓட்டுநர் உரிம அட்டைகள் அச்சிடும் செலவை மிச்சப்படுத்தும் வகையிலும் இந்த பணி, இந்த நடைமுறை அமலுக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. செலவை குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
 ஓட்டுநர் உரிமத்தை கையில் எடுத்துச் செல்வதற்கு பதிலாக, டிஜிட்டல் செயலியில் ஓட்டுநர் உரிமத்தை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும், எனவே ஓட்டுநர் உரிமை தொலைந்து விடும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் ஒருவேளை ஓட்டுநர் உரிமம் அட்டையாக தேவைப்படுவோர் கியூ ஆர் கோடு மூலம் டவுன்லோட் செய்து, அச்சிட்டு கொள்ளலாம் என்றும் கேரள மாநில மோட்டார் வாகனத்துறை தெரிவித்துள்ளது.
 
 
Edited by Mahendran