இந்தியாவின் டிஜிட்டல் மாநிலமாக கேரளா தேர்வு


Murugan| Last Modified செவ்வாய், 1 மார்ச் 2016 (17:36 IST)
இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலமாக கேரளா மாநிலத்தை அறிவித்துள்ளார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.

 

 
கேரளா கோழிக்கோட்டில் தொழில்நுட்பத்தை பரவலாக்கும் திட்டம் தொடர்பான விழாவில் இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். அதன்பின் அந்த விழாவில் பேசிய அவர் கேரளாவை இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
 
பிரணாப் இப்படி அறிவிக்கும் அளவிற்கு கேரளாவில் தொழில் நுட்பம் எப்படி வளர்ந்துள்ளது என்பது பற்றி பார்ப்போம்.
 
கடந்த சில ஆண்டுகளில் 100 சதவீத மொபைல் இணைப்பையும், 75 சதவீத இணைய கல்வியறிவையும் சாத்தியமாக்கியுள்ளது.
 
இணைய வழி வங்கி சேவை மற்றும் நிர்வாகத்தை மின்னணு மயமாக்கியதில் முதல் இடத்தில் உள்ளது.
 
கிராம பஞ்சாயத்துகளுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்புகளை சாத்தியப்படுத்தியது.
தேசிய ஆப்டிக்கல் பைபர் நெட்வொர்க் (NOFN) திட்டத்தின் கீழ் நீண்ட அலைவரிசை இணைப்பு மூலம் கிராமங்களை இணைத்த முதல் மாநிலமாக கேரளா திகழ்கிறது.
 
மொத்த மக்கள் தொகையில் 95 மக்களுக்கு மொபைல் கவரேஜ் மற்றும் 60 சதவீத மக்களுக்கு இணைய வசதியை சாத்தியமாக்கிய முதல் மாநிலமாக கேரளா இருக்கிறது. 


இதில் மேலும் படிக்கவும் :