1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (13:22 IST)

பிராமணர் அல்லாதவரும் பிரசாதம் தயாரிக்கலாம்! – கேரள அரசு அதிரடி அறிவிப்பு!

சபரிமலை பிரசாதத்தை பிராமணர்கள் மட்டுமே தயாரிக்கலாம் என்ற முறையை மாற்றி யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். இந்நிலையில் சபரிமலையில் மலையாளி பிராமணர்கள் மட்டுமே பிரசாதம் தயாரிக்கலாம் என்று சமீபத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதையடுத்து அம்பேத்கர் கலாச்சார பேரவை தலைவர் சிவன் என்பவர் இதை எதிர்த்து மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள கேரள அரசு பிராமணர்கள் அல்லாதவரும் சபரிமலை பிரசாதங்களை தயாரிக்கலாம் என அறிவித்துள்ளது.