வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2022 (12:05 IST)

நரபலி உறுப்புகளை பெங்களூரில் விற்க ப்ளான்..? – தோண்ட தோண்ட அதிர்ச்சி தகவல்கள்!

Kerala Couples
கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல் உறுப்புகளை பெங்களூருவில் விற்க கொலை கும்பல் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரளாவில் தம்பதியர் இருவர் ஒரு மந்திரவாதியுடன் சேர்ந்து இரண்டு பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுத்தொடர்பான விசாரணையில் நாளுக்கு நாள் வெளியாகி வரும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன.


வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என மந்திரவாதி ஷபியோடு சேர்ந்து நரபலி கொடுத்த பகவல் சிங் – லைலா தம்பதியினர், நரபலிக்கு முன்னதாக நிர்வாண பூஜைகள், பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், நரபலி கொடுத்தவர்களின் இறைச்சியை சாப்பிட்டதாகவும் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம் நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் குறிப்பிட்ட உடல் பாகங்களை மட்டும் வெட்டி தம்பதியர் ஃப்ரிட்ஜில் வைத்திருந்துள்ளனர். அவற்றை அவர்கள் பெங்களூரில் வேறு சிலருக்கு விற்க இருந்ததாக கூறப்படுகிறது. அங்கு மனித இறைச்சியை வாங்க இருந்தவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edited By: Prasanth.K