வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஜனவரி 2020 (11:21 IST)

நேற்று இரண்டு, இன்றும் இரண்டு: தரைமட்டமாகும் அடுக்குமாடி கட்டிடங்கள்

கேரள மாநிலம் கொச்சியில் விதிகளை மீறி கட்டப்பட்ட மரடு அடுக்குமாடி குடியிருப்பு நேற்று வெடிவைத்து தகர்க்கப்பட்டது. முதற்கட்டமாக  ஹெச் டூஓ ஹோலி பெய்த் அடுக்குமாடி குடியிருப்பின் 19 மாடிகள் 9 வினாடியில் தரைமட்டமாகின. அதைத் தொடர்ந்து  ஆல்பா செரைன் என்ற அடுக்குமாடி குடியிருப்பும் இடிக்கப்பட்டது
 
இந்த நிலையில் நேற்று இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்ட நிலையில் இன்றும் அதேபோல் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்படுகின்றன. இன்று காலை 11 மணிக்கு கேரள மாநிலம் கொச்சி மராடுவில் ஜெயின் கோரல் குடியிருப்புகள் வெடிவைத்து இடித்து அகற்றப்பட்டது. விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட புகாரில் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த கட்டிடம் இடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று மதியம் 2 மணிக்கு கோல்டன் காயலோரம் அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கட்டிடங்கள் அனைத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துளைகள் போடப்பட்டு அவற்றில் அமோனியம் நைட்ரேட் என்ற பொருள் நிரப்பப்பட்டது. இதனால் இந்த கட்டிடங்கள் அனைத்தும் உள்நோக்கி இடிந்து விழுந்தன. முன்னதாக கட்டிடத்தை சுற்றியுள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு 200 மீட்டர் தொலைவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது