புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 3 நவம்பர் 2021 (12:22 IST)

திருமணமான மறுநாளே தோழியுடன் ஓடிய மணப்பெண்! – மயங்கி விழுந்த மாப்பிள்ளை!

கேரளாவில் திருமணமான மறுநாளே மணப்பெண் தன் தோழியுடன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் வாலிபர் ஒருவருக்கும், இளம்பெண்ணுக்கும் கடந்த மாதம் 25ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் மறுநாள் இருவரும் பணம் எடுக்க வங்கி சென்றபோது போன் பேசிவிட்டு வருவதாக வெளியே சென்ற இளம்பெண் மாயமானார்.

இதுகுறித்து போலீஸில் புகார் அளித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இளம்பெண் தனது கல்லூரி தோழியுடன் அந்த பக்கமாக வாகனத்தில் தப்பி சென்றது தெரிய வந்துள்ளது. இதையறிந்த மணமகன் அதிர்ச்சியில் மயங்கி விழ அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் மணமகளும், அவர் தோழியும் மதுரையில் தங்கியிருப்பது தெரிந்து அங்கு சென்ற போலீஸார் மற்றும் பெற்றோர்கள் அவர்களை அங்கிருந்து அழைத்து வந்துள்ளனர். விசாரணையில் இருவரும் கல்லூரி காலத்திலிருந்தே நெருக்கமாக பழகி வந்ததும், திருமணத்தில் கிடைக்கும் பணத்தை வைத்து தப்பி சென்று சேர்ந்து வாழ திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய போலீஸார் அவர்களை அவரவர் குடும்பத்துடன் திரும்ப அனுப்பியுள்ளனர்.