1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By k.N.Vadivel
Last Updated : செவ்வாய், 15 செப்டம்பர் 2015 (06:10 IST)

கச்சத்தீவு மீட்பது குறித்து மத்திய அரசு பேச வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

டெல்லி வரும் இலங்கை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம், கச்சத்தீவு மீட்பது குறித்து மத்திய அரசு பேச வேண்டும் என ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.
 

 
இது குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இந்தியா வருகைதர உள்ளார். அப்போது, இலங்கை தமிழர் மற்றும் தமிழக மீனவர் பிரச்னையை தீர்க்கும் வாய்ப்பாக, இதை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
இலங்கை அரசு, 13ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தை செயல்படுத்த அழுத்தம் கொடுப்பதுடன், இலங்கை தமிழருக்கு, சம உரிமை கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.
 
இலங்கை சிறையில் வாடிய, 16 மீனவர்கள் விடுதலை செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கின்றது. ஆனால், இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட, தமிழக மீனவர்களின் படகுகள், உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. எனவே, அந்தப்படகுகளை உடனே தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கவும்,  சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் பெறவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
மேலும், இலங்கை அமைச்சர்கள், தமிழக மீனவர் குறித்து, பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை ரணில் விக்ரமசிங்கேவிடம் வலியுறுத்த வேண்டும். குறிப்பாக, கச்சத்தீவு மீட்பு குறித்து, மத்திய அரசு பேச முன் வர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.