புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 3 ஜூன் 2024 (15:25 IST)

தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் கருணாநிதி..! பிரதமர் மோடி புகழாரம்..!!

Modi
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழர்கள், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கருணாநிதி என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
 
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி டெல்லியிலும் கருணாநிதியின் உருவ படத்திற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் திமுக எம்பிக்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
 
இந்நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கருணாநிதியின் 101வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். 
 
தனது நீண்ட ஆயுளில் பொது வாழ்வில் தமிழர்கள், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கருணாநிதி என்றும் அவர் அறிவாற்றல், புலமைக்காக மதிக்கப்படுபவர் என்றும் புகழாரம் சுட்டியுள்ளார். 


நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதல்வராக இருந்தபோதும், அவருடன் நான் நடத்திய பல உரையாடல்களை நினைவுகூர்கிறேன் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.