1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 22 பிப்ரவரி 2017 (18:51 IST)

அடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது உயிர் பிழைத்த வாலிபர்

கர்நாடக மாநிலத்தில் நாய் கடித்து உயிர் இழந்ததாக கருதப்பட்ட வாலிபர் அடக்கம் செய்வதற்காக மையானத்திற்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிர் பிழைத்த அதிசயம் அரங்கேறியுள்ளது.


 

 
கர்நாடக மாநிலம் தர்வாட் மாவட்டத்தின் மானாங்குடி பகுதியைச் சேர்ந்த குமார் மார்வாத்(17) என்பவரை கடந்த மாதம் நாய் ஒன்று கடித்துள்ளது. எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாத குமாருக்கு அண்மையில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 
 
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமாரின் உடல்நிலை அபாய கட்டத்தை எட்டியுள்ளது. மருத்துவர்கள் குமாரின் பெற்றோரிடம் காப்பாற்ற முடியது என கூறியுள்ளனர். இதனால் குமாரின் பெற்றோர், குமாரை வீட்டில் வைத்து கவனித்து வந்துள்ளனர். திடீரென குமாரின் உடல் அசைவுகள் நின்று போய்வுள்ளது.
 
இதனால் குமார் இறந்துவிட்டதாக கருதி அவருக்கு இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்ய மையானத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் குமார் திடீரென விழித்துக்கொண்டு முச்சு விட்டுள்ளார். அவரது உடலில் அசைவு ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.