1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 18 ஜூலை 2017 (14:44 IST)

சசிகலா தும்குரு சிறைக்கு மாற்றம்; கர்நாடக உள்துறை முடிவு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, சிறை விதிமுறையை மீறியதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து தும்குரு பெண்கள் சிறைக்கு மாற்ற கர்நாடக உள்துறை முடிவு செய்துள்ளது.


 

 
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக டிஐஜி ரூபா கர்நாடக முதல்வரிடம் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ரூபா பணிமாற்றம் செய்யப்பட்டார். சசிகலா சிறையில் சகல வசதிகளுடன் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
 
இந்நிலையில் சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற கர்நாடக உள்துறை முடிவு செய்துள்ளது. கர்நாடக மாவட்டம் தும்குரு சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உத்தரவு பெற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் உடனடியாக மாற்ற முடியாது. 15 நாட்கள் முதல் 1 மாதம் வரை ஆகுமாம். 
 
மேலும் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் சிறைத்துறை விதி மீறல் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் இன்று சிறை கைதிகளிடம் விசாரணை நடத்த உள்ளனர்.