திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 17 ஜூலை 2021 (14:01 IST)

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய எடியூரப்பா சம்மதம்?

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய எடியூரப்பா சம்மதம் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் கர்நாடக பாஜகவில் நிலவும் உட்கட்சி மோதல் காரணமாக எடியூரப்பா பதவி விலக கோரிக்கை வலுத்துள்ளது. 
 
கர்நாடக அமைச்சர்கள் சிலரே எடியூரப்பாவுக்கு எதிராக போர்கொடி தூக்கியதால் கட்சி மேலிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், உடல் நிலையை காரணம் காட்டி கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய எடியூரப்பா சம்மதம் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
மேலும், எடியூரப்பா தனது மகன் விஜயேந்திராவுக்கு மாநில கட்சி பிரிவில் உயர் பதவி கிடைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் பரவியது.