1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 31 மே 2023 (11:57 IST)

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 : வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறும் சித்தராமையா

Sidharamaiya
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தமிழகத்தில் திமுக கொடுத்த வாக்குறுதியை இரண்டு ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாமல் உள்ளது. இந்த நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸ் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. இந்த நிலையில் தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் கர்நாடக முதல்வர் சித்தராமையா  திணறி  வருவதாக கூறப்படுகிறது. 
 
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1500, மகளிருக்கு அரசு பேருந்து இலவச பயணம், அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம், 10 கிலோ இலவச அரிசி மற்றும் இல்லத்தரசிகளுக்கு மாத ரூ.2000 வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த  க்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று முதல்வர் சித்தராமையா  கூறிய நிலையில் தற்போது எந்த இலவச திட்டமும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 
மேற்கண்ட இந்த ஐந்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற ரூ.62,000 கோடி தேவை என்பதால் அந்த நிதியை எங்கிருந்து திரட்டுவது என்று புரியாமல் முதல்வர் சித்தராமையா   குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran