திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 16 ஜனவரி 2019 (11:39 IST)

கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் எங்கே? பரபரப்பு தகவல்

கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநில தேர்தலில் 222 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.  மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.

104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவும், 80 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்காமல் மக்கள் புறக்கணித்த ஒரு கட்சியின் தலைவர் முதல்வர் ஆனது அம்மாநில மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. மேலும் குமாரசாமி தலைமையிலான ஆட்சி விரைவில் கவிழ்ந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 12 பேர் பாஜகவுக்கு ஆதரவு தரவிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. அதுமட்டுமின்றி இரண்டு சுயேட்சைகளும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால் கர்நாடகாவில் அசாதாரண அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் ஹரியானாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இந்த செய்தியை அறிந்தவுடன் பாஜக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஹோட்டல் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளியே வந்து மக்கள் பணியாற்ற செல்லவேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான ஊழல் ஏற்பட்டுள்ளது