1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (05:37 IST)

கர்நாடகத்தில் இன்று பந்த் - தமிழர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு?

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடக மாநிலத்தில் இன்று பந்த் நடைபெறுகிறது.
 

 
இந்த முழு கடை அடைப்பிற்கு கன்னட சலுவளிக் கட்சி, கன்னட ரக்ஷன வேதிகா உள்ளிட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், அம்மாநில அரசும், அரசியல் கட்சிகளும் மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளன.
 
இதனால், இன்று கர்நாடக மாநிலத்தில் பேருந்துகள், கல்வி நிலையங்கள், பெட்ரோல் பங்குகள், உணவகங்கள், திரையரங்குகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலங்கள் அனைத்தும் அடைக்கப்பட உள்ளது. விமான நிலையங்கள் இயங்கினாலும், டாக்சிகள் இயக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. 
 
பந்த் அறிவிப்பு காரணமாக கர்நாடக மாநிலத்தில், தமிழர்கள் பெரும் அச்சத்திலுள்ளனர். எனவே தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றாலோ, உதவி தேவைப்பட்டாலோ, காவல்துறையின் உதவிஎண்ணான 100-க்கு டயல் செய்ய பெங்களூரு காவல்துறை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.