தனக்கு தானே ரூ.100 அபராதம் விதித்து கொண்ட கான்பூர் ஐஜி: எதற்கு தெரியுமா?
தனக்கு தானே ரூ.100 அபராதம் விதித்து கொண்ட கான்பூர் ஐஜி
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவின் உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநில மக்களுக்கு மாஸ்க் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றன. ஒரு சில மாநிலங்களில் மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் ரூபாய் 100 முதல் 500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கான்பூரில் போலீஸ் ஐஜி பதவியில் இருந்து வரும் மொஹிந்த் அகர்வால் என்பவர் சமீபத்தில் கொரோனா பாதிப்பு குறித்த நடவடிக்கைகளை சோதனை செய்ய சென்றார். அப்போது அவர் சக போலீஸ் அதிகாரிகளுக்கு கொரோனா நடவடிக்கை குறித்து அறிவுறுத்தல் கூறிக் கொண்டிருக்கும் போது திடீரென தான் மாஸ்க் அணியாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்
ஒரு சில நொடிகளில் அவர் சுதாரித்துக் கொண்டு உடனடியாக தனது வாகனத்தில் இருந்து மாஸ்க்கை எடுத்து அணிந்து கொண்டார். இருப்பினும் தன்னுடைய தவறுக்காக ரூபாய் 100 அபராதம் கட்டுவதற்கான செலானில் கையெழுத்திட்டு பணத்தையும் செலுத்தினார். சில நொடிகள் மட்டுமே மாஸ்க் அணியாமல் இருந்ததற்காக 100 ரூபாய் அபராதம் செலுத்தி மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்த ஐஜி மொஹிந்தர் அகர்வால் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது