1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 24 மே 2024 (08:24 IST)

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

டெல்லி ஜவஹர்லால் நேரு  பல்கலைக்கழகத்தில் புரட்சிகரமாக பேசிய மாணவர் பேரவையின் தலைவர் கன்னையா குமார் தற்போது தேர்தலில் போட்டியிடும் நிலையில் தேர்தல் செலவுக்காக திரட்டப்பட்ட நிதியில் இரண்டு மாடி சொந்த வீடு கட்டிக் கொண்டிருப்பதாக கூறப்படுவதை அடுத்து இதுதான் புரட்சியாய் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் புரட்சிகரமாக பேசி பிரபலமான கன்னையா குமார் அதன்பிறகு தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
 
இந்த நிலையில் மீண்டும் தற்போது வடகிழக்கு டெல்லி தொகுதியில் கன்னையா குமார் போட்டியிடும் நிலையில் தேர்தல் செலவுக்காக அவர் பிரபலங்களிடமிருந்து நிதி திரட்டியதாகவும், அந்த நிதியை தேர்தல் செலவு செய்யாமல் சொந்த வீட்டை கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இரண்டு அடுக்கு மாடி வீடு மற்றும் புதிய கார் ஆகியவை அவருக்கு தற்போது சொந்தமாக இருப்பதை அறிந்த பொதுமக்கள் டெல்லி பல்கலைகழகத்தில் நீங்கள் செய்த புரட்சி இது தானா என்று கேள்வி எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva