1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 31 மே 2019 (14:31 IST)

மீண்டும் ஆரம்பிக்கும் 2 ஜி வழக்கு – ஆ ராசா, கனிமொழிக்கு நோட்டிஸ் !

2 ஜி வழக்கின் விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் ஆ ராசா மற்றும் கனிமொழிக்கு நோட்டிஸ் அனுப்பவுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய ஊழல் என ஊடகங்களாலும் எதிர்க்கட்சிகளாலும் பேசப்பட்ட 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி. சைனி கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி அறிவித்தார்.   இந்த தீர்ப்பை எதிர்த்து  அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்துள்ளன. ஒருவருடமாக இவ்வழக்கு விசாரணையில் இருந்துவருகிறது.

இந்த வழக்கின் விசாரனை இன்று நீதிபதி ஏ.கே.சாவ்லா முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.  ஆனால் சிபிஐ தரப்போ தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கு சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது.

இதை ஏற்ற நீதிபதி வழக்கின் விசாரணையை ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் வழக்கு சம்மந்தமாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.