டெல்லியில் ‘காக்கா முட்டை’ கதை சம்பவம்


Abimukatheesh| Last Modified திங்கள், 13 ஜூன் 2016 (22:33 IST)
காக்கா முட்டை கதையின் சம்பவம் டெல்லியில் நிஜமாகவே நடைப்பெற்றுள்ளது.

 

 
காக்கா முட்டை திரைப்படத்தில் வரும் சம்பவம் போன்று நிஜமாகவே தில்லியில் ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது.
 
டேரூடானைச் சேர்ந்த எழுத்தாளர் சோனாலி ஷெட்டி தனது கணவர் பிறந்தநாளையொட்டி சனிக்கிழமை டெல்லியில் உள்ள தெருவோரும் வசிக்கும் எட்டு சிறுவர்களை அழைத்துக் கொண்டு, டெல்லி ஜன்பத் பகுதியில் உள்ள சிவ சாகர் உணவகத்துக்குச் சென்றார்.
 
அந்த உணவகத்தில் குழந்தைகள் கிழிந்த ஆடைகளை அணிந்துள்ளதாகக் கூறி, கடைக்குள் அனுமதிப்பதற்கு கடை முதலாளி விதுர் கனோடியா மறுப்பு தெரிவித்துவித்துள்ளார். இதையடுத்து சோனாலி ஷெட்டிக்கும், கடை முதலாளிக்கும் இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
 
இதனிடையே சோனாலி கடையின் அருகே நள்ளிரவு வரை அக்குழந்தைகளுடன் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இருந்தும், காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 


இதில் மேலும் படிக்கவும் :