வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 10 ஜனவரி 2018 (22:36 IST)

இஸ்ரோ தலைவராக முதல்முறையாக சிவன் என்ற தமிழர் தேர்வு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் என்று அழைக்கப்படும் இஸ்ரோவின் தலைவராக கே.சிவன் என்ற தமிழர் தேர்வு செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் பெருமையான ஒரு விஷயமாக கருதப்படுகிறது. இதற்கான உத்தரவை சற்றுமுன்னர் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தற்போது இஸ்ரோவில் தலைவராக உள்ள கிரண்குமார் என்பவரது பதவிக்காலம் ஜனவரி 12ஆம் தேதியுடன் முடிவடைவதால் புதிய தலைவராக கே.சிவன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். 104 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் செலுத்திய சாதனைக்கு மூளையாக செயல்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை எம்.ஐ.டி. கல்விநிறுவனத்தில் ஏரோநாட்டிக்கல் பாடப்பிரிவில் கடந்த 1980-ல் பட்டம்பெற்ற கே.சிவன் அவர்கள் இதற்கு முன்னர் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ இயக்கத் திட்ட மையத்தின் இயக்குனராக பணிபுரிந்துள்ளார். 

இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 12ஆம் தேதி இஸ்ரோ தலைவராக பதவியேற்கவுள்ள தமிழர் கே.சிவன் மூன்றாண்டுகளுக்கு பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.