ஞாயிறு, 23 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 12 மே 2017 (06:07 IST)

இதுக்கா 75,000 ரூபாய் கொடுத்தோம்? ஜஸ்டின் பீபரை வறுத்தெடுத்த மும்பை ரசிகர்கள்

உலகப்புகழ் பெற்ற கனடா நாட்டு பாப் பாடகர் ஜஸ்டின் பீபரின் இசை நிகழ்ச்சி சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது,. முதன்முதலாக இவர் இந்தியா வந்துள்ளதால் விஐபிகளின் வாரிசுகள் உள்பட பலர் ரூ.4000 முதல் ரூ,75000 வரை டிக்கெட் கொடுத்து இந்த இசை நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்தனர்.



 


ஆனால் ஜஸ்டின் பீபர் இந்திய ரசிகர்களை ஏமாற்றிவிட்டாராம் வெறும் நான்கு பாடல்களை மட்டுமே பாடிய இவர் மற்ற பாடல்கள் பின்னணியில் சிடியில் பாடல் ஒலிக்க இவர் வெறுமனே வாயசைக்க மட்டும் செய்தாராம்

இதையறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரூ.75000 கொடுத்து இந்த நிகழ்ச்சியை தன் மகளுடன் பார்க்க வந்த இயக்குநரும் நடிகருமான அனுராக் பாசு, "அவர் மொத்தம் நான்கு பாடல்களுக்கு மட்டுமே வாய் விட்டுப் பாடினார். மற்றதெல்லாம் வெறும் வாயசைப்பு மட்டுமே செய்தார். இதுக்காகவா நாங்கள் ரூ.75,000 கொடுத்தோம்? மேடை நிகழ்ச்சி நடத்தவரும் கலைஞன் தன் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது" என்றார்.